தமிழ்நாடு

சிறுநீர் கழித்த விவகாரம்.. காவலரை ஆபாசமாகப் பேசி மிரட்டும் வீடியோ வைரல்!

காவல் உதவி மைய சுவற்றில் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட தகராறில், சிறப்பு உதவி ஆய்வாளரை ஆபாசமாகப் பேசி மிரட்டும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது.

சிறுநீர் கழித்த விவகாரம்.. காவலரை ஆபாசமாகப் பேசி மிரட்டும் வீடியோ வைரல்!
சிறுநீர் கழித்த விவகாரம்.. காவலரை ஆபாசமாகப் பேசி மிரட்டும் வீடியோ வெளியீடு!
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த செண்பக ராஜா எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று (ஜூலை 27) மாலை பிராட்வே வடக்கு பேருந்து நிலையத்தில் வழக்கம் போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, அப்போது அங்கிருந்த காவல் உதவி மையம் அருகில் ஒருவர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செண்பக ராஜா போலீஸ் பூத் சுவற்றில் ஏன் சிறுநீர் கழித்தீர்கள்? அந்த நபரிடம் கேட்டபோது, இது போலீஸ் பூத் போல இல்லை பாழடைந்த கட்டிடம்போல இருப்பதாகக் கூறி அந்த நபர் உதவி ஆய்வாளரை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த உதவி ஆய்வாளர் தோளில் கை வைத்துத் தள்ளியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அந்த நபர் உடனடியாகத் தனது நண்பர் பீர் அணிப் என்பவரை அழைத்து வந்த நிலையில், பீர் அணிப் உதவி ஆய்வாளர் சென்பகராஜாவிடம் உங்களுக்குத் தாக்க யார் அதிகாரம் கொடுத்தது? குடிபோதையில் தாக்குவதா? என காவலரை மார்பில் கை வைத்துத் தள்ளியும், ஆபாசமாக பேசியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அங்கிருந்து மற்ற காவலர்கள் சமாதானம் செய்த நிலையில், இது தொடர்பாகச் சிறப்பு உதவி ஆய்வாளர் செண்பகராஜா அளித்த புகாரின் பேரில் எஸ்பிளனேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் காவல் உதவி ஆய்வாளர் தாக்கி விட்டதாக அந்த நபர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யார் மீது தவறு என்பது குறித்து எஸ்பிளனேடு போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.