வீடியோ ஸ்டோரி

மதுபான பாரில் மாமூல் தகராறு –இருவரை கைது செய்த போலீசார்

நாமக்கல், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான பாரில் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட சம்பவம்


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் திமுகவை சேர்ந்த ராஜா(42) என்பவர் அரசு அனுமதி பெற்று மதுபான பார் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராசிபுரம் திமுக 24-வது வார்டு உறுப்பினராக கலைமணி(54) என்பவர் உள்ள நிலை அவரது மகன் லோகசரவணன்(35) பார் உரிமையாளரிடம் மாமூல் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கவுன்சிலர் மகன் லோகசரவணா அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

பார் உரிமையாளர் ராஜா, மாமூல் கேட்டதாக லோகசரவணன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்