அரசியலுக்கு வரும் நடிகர்கள், நடிகைகளுக்கு துணை நில்லுங்கள் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
சென்னை சி.ஐ.டி நகரில் நடைபெற்ற தாயம்மா குடும்பத்தார் நெடுந்தொடர் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழ் திரையுலகில், சில இடங்களில் பாலியல் தொடர்பான தவறுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய ராதிகா, ஹேமா கமிட்டி குறித்து முன்னனி நடிகர்கள் மெளனம் காப்பது தவறு எனக் குற்றம்சாட்டினார். அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர்கள் முதலில் நடிகைகளுக்கு துணை நிற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும் பேசிய நடிகை ராதிகா, நிறைய நடிகர்கள் தவறு செய்துள்ளனர், அவர்களின் பெயர்களை கூற விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.