வீடியோ ஸ்டோரி

#BREAKING | போதைப்பொருள் - கண்காணிக்க அறிவுறுத்தல் | Kumudam News 24x7

பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதைப் பொருள் புழக்கத்தை காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுவதை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதன்படி, மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை உடனடியாக காவல்துறையிடம் கொண்டு செல்வதற்கு, அனைத்து கல்லூரிகளிலும் காவலர் ஒருவரை நியமிக்க பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், மகளிர் கல்லூரி விடுதிகள் போன்றவற்றில் வெளியாட்கள் பணிக்கு வந்தால், கல்லூரியை சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர், அவர்களுடன் இருந்து பணிகளை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.