6 பேர் கொண்ட பாஜக தமிழ்நாடு ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்து, தேசிய பொதுசெயலாளர் அருண் சிங் பட்டியலை வெளியிட்டுள்ளார். எச்.ராஜா ஒருங்கிணைப்பாளராகவும், சக்ரவர்த்தி, கணகசபாபதி, முருகானந்தம், ராமசீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் குழு உறுப்பினர்களாகவும் செயல்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக திட்டங்கள் தொடர்பாக மாநில நிர்வாகிகளிடம் விவாதித்து முடிவுகளை எடுத்து அமல்படுத்த இக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்தலின் பேரில், குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களில் நேரடி ஆய்வு நடத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.