Doddabetta Hills Visit : தற்போது கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறை என தொடா் விடுமுறை காரணமாக உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்து காணப்பட்டனா். குறிப்பாக உதகையில் உள்ள உலக புகழ்பெற்ற அரசு தாவரவயல் பூங்காவில் உள்ள வானுயா்ந்த மரங்கள் மற்றும் கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ண மலா்களை கண்டு ரசித்து மகிழ்ந்தனா். மேலும் உதகையில் காணப்படும் இதமான காலநிலையை அனுபவித்தவாறு படகு சவாரி செய்தும் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினா்.
வீடியோ ஸ்டோரி
Doddabetta Hills Visit : தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல அனுமதி
Doddabetta Hills Visit : ஆறு நாட்களுக்குப் பிறகு உதகையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.