வீடியோ ஸ்டோரி

VCK Maanadu: விசிக மது ஒழிப்பு மாநாடு.. Vijayயும் கலந்து கொள்ளலாம் - விசிக தலைவர் திருமாவளவன் | TVK

தேர்தல் அரசியல் மற்றும் கூட்டணி அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டினை முடிச்சி போட வேண்டாம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்த அவர், “விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம் எல்லாம் கட்சிகளும் வரலாம்  இந்த நிலைப்பாடை தேர்தல் அரசியலோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது. தேர்தல் அரசியல் மற்றும் கூட்டணி அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டினை முடிச்சி போட வேண்டாம். இது எல்லோரும் இருக்கிற மது ஒழிப்பு மாநாடு.கூட்டணியில் இருந்தால் நல்ல பிரச்சனைகள் இருந்தால் எதிர்த்து போராடும் அதன்படி அதிமுக மது ஒழிப்பு மாநாட்டிற்கு வந்து மேடையில் பேசலாம். பாஜகவும் பாமகவும் விற்கு தான் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை அவர்கள் மதவாத சாதியவாத கட்சி என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எப்போதும் அவர்களுடன் இணைய மாட்டோம். தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ள விஜய்யும் இந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம்” என்றார்.