கேரளாவில் காரில் வந்து ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டு விட்டு லாரியில் தப்பிச் சென்ற வடமாநில கொள்ளையர்கள் சிக்கினர். அவர்களை கேரள போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இதே பாணியில் கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் விசாகப்பட்டினத்திலும் 6 எஸ்.பி.ஐ. ஏடிஎம் மையங்களில் 1கோடியே 60 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. வேறு காரை பயன்படுத்திய கும்பல், தற்போது பிடிபட்ட லாரியில் தப்பிச் சென்றுள்ளனர்.
தமிழக போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவலின் மூலமாக விசாகப்பட்டினம் போலீசாரும் இது தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்காக விசாகப்பட்டினம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூரிய பிரகாஷ் தலைமையிலான போலீசார் நாமக்கல் வெப்படை காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்களும் கொள்ளையர்களை கஷ்டடியில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.