வீடியோ ஸ்டோரி

"நீங்க இப்படி கேட்டா அப்படி பேசுவீங்க..." - அமைச்சர் கே.என்.நேரு கலகல பதில்

வடகிழக்கு பருவமழை முடியும் வரை அவசரப் பணிகள் தவிர சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து மண்டலங்களிலும் கொசு ஒழிப்பு பணிக்காக  புகைபரப்பும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்,நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு, 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூடுதல் 100 புகைபரப்பும் இயந்திரங்களை களப்பணியாளர்களுக்கு வழங்கினார்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 792 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர் வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். அதோடு ஒரு ஒரு வார்டுக்கும் மழைநீர் அகற்றுவதற்காக 5 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பருவமழை முடியும் வரை அவசரப் பணிகள் தவிர சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.