செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூர் பகுதியை சேர்ந்த யாகேஸ்வரனும், பெத்த கூடலூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பேருந்து மோதியதில் மாணவி படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதனைக் கேட்ட யாகேஸ்வரன், காதலி இறந்த துக்கம் தாங்காமல், பாண்டிச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.