வாழை படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின் அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது X தளத்தில், “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழையை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!
பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!
தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.
LIVE 24 X 7









