வீடியோ ஸ்டோரி

கந்தகார் விமானக் கடத்தல் சர்ச்சை.. மத்திய அரசிடம் உறுதியளித்த Netflix

IC 814 வெப் தொடரில் எழுந்த சர்ச்சை தொடர்பாக, எதிர்காலத்தில் தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தொடர்கள் எடுக்கப்படும் என மத்திய அரசிடம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


நெட்பிளிக்ஸில் வெளியான IC 814 வெப் தொடரில் கந்தகார் விமானக்கடத்தல் குறித்தான காட்சியில் பயங்கரவாதிகளுக்கு இந்து பெயர் வைக்கப்பட்டது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை நெட்பிளிக்ஸின் இந்திய உள்ளடக்க தலைவர் மோனிகா ஜெர்கில்லுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் இன்று நெட்பிளிக்ஸ் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் எதிர்காலத்தில் தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தொடர்கள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.