வீடியோ ஸ்டோரி

"அவர்களுக்கு தகுதி இல்லை..!" - திமுகவை கடுமையாக சாடிய ஜெயக்குமார்

திமுகவுக்கு அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட தகுதியே இல்லை - திமுகவை கடுமையாக சாடிய ஜெயக்குமார்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திமுகவுக்கு அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட தகுதியே இல்லை. இந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் ஸ்டாலின் இதுவரை கொண்டுவந்த திட்டங்களில், அவரது தந்தை கருணாநிதியின் பெயரைத் திட்டங்களுக்கு சூட்டினாரே தவிர அண்ணாவின் பெயரை எதுக்குமே சூட்டியதில்லை. அண்ணாவின் புகழும் கொள்கைகளும் முற்றிலுமாக மறைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.