வீடியோ ஸ்டோரி

டெல்லியில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி நெறிமுறைகள்

யுஜிசி விதிகளை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.


இதை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தமிழ்நாடு அரசு தனி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது. இது குறித்து மத்திய கல்வித்துறை மந்திரிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதமும் எழுதி இருந்தார்.