வீடியோ ஸ்டோரி

PM Kisan Yojana: விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. வங்கி கணக்கில் இன்று ரூ.2,000

பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.

18வது தவணைத் தொகை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு சுமார் 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 19வது தவணைக்காக விவசாயிகள் இன்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், குறைந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான், பிஎம் கிசான் எனப்படும் "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா" திட்டம்.

பீகார் மாநிலம் பாகல்பூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், ரூ.22 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

பி.எம். கிஸான் திட்டத்தின் 19வது தவணை நிதி இன்று விடுவிப்பு”