சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் நேற்று புழல் சிறையில் தீடீரென சோதனை நடத்தினர்.
கைதிகளுக்கான உணவை சாப்பிட்டு பரிசோதித்து பார்த்த போது உணவு தரமானதாகவும், சுவையாகவும் இருந்ததாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், கொடுங்குற்றத்திற்காக சிறையில் அடுக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்த போது அவர்களும் சிறை வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்ததாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.