வீடியோ ஸ்டோரி

"பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் பட்டியல் தயார்" - அன்பில் மகேஷ்

"200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய பட்டியல் தயார்" என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களை பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்

பாலியல் குற்றச்சாட்டு புகார்களுக்கு உள்ளான 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பாலியல் குற்றச்சாட்டு புகார்களுக்கு  உள்ளான 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளாதாகவும், ஆசிரியர்களின் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, அவர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். நாளை நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் ஆலோசனைக்கு பிறகு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.