அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்.
மகாவிஷ்ணுவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி.
இதனிடையே போலீஸ் விசாரணைக்கு தான் முழுமையாக ஒத்துழைப்பு தர உள்ளதாகவும், அதனால் வழக்கறிஞர் தேவையில்லை எனவும் தானே தனது தரப்பை தெரிவிப்பதாகவும் மகாவிஷ்ணு கூறிய நிலையில் அவரது வழக்கறிஞர் பாலமுருகன் வழக்கிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் சைதாப்பேட்டை போலீசார் விஷ்ணுவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.