மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தின் கடைசி பாகத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, அப்படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 1996ம் ஆண்டு வெளியான நிலையில், இப்படத்தின் ஏழு பாகங்களும் அடுத்தடுத்து வெளியாகி சர்வதேச அளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
நடிகர் டாம் குரூஸ் நடிப்பில், ‘மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெகனிங் படத்தின் எட்டாவது பாகம் மிக பிரமாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி திரைப்படம் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் டீசரில் அறிவித்துள்ளனர்.
டீசரை காண கீழே பார்க்கவும்: