வீடியோ ஸ்டோரி

ஏரியாக ,மாறிய விளைநிலங்கள்.. தண்ணீர் பார்த்து கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெய்த கனமழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவேலங்குடி பகுதியில் சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விதைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மழைநீரில் மூழ்கி அழுகிய நிலையில், ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து பெருக்கெடுத்து  ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், கழிவுநீர் காரணமாக நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.