சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 16-ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் படிப்படியாக மழை அதிகரித்து, வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேட்டியளித்த பாலசந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக கூறினார். தமிழ்நாடு அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும் பருவமழை எச்சரிக்கையை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் கூறினார்.