ராமநாதபுரத்தில் ரயிலில் இறங்கும் பொழுது தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மண்டபத்தில் இருந்து புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலானது ராமநாதபுரம் ரயில் நிலையத்தை வந்தடைந்துள்ளது. அப்போது மாரிமுத்து என்பவர் ரயில் பெட்டியில் இருந்து இறங்கிய போது மீண்டும் ரயில் புறப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய அவர் பெட்டியில் இருந்து தவறி கீழே விழுந்து கம்பியைப் பிடித்தவாறு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் உடனே அவரை காப்பாற்றினர்.
வீடியோ ஸ்டோரி
ஓடும் ரயிலில் தடுமாறி விழுந்த பயணி...திக் திக் நிமிடங்கள்
ராமநாதபுரத்தில் ரயிலில் இறங்கும் பொழுது தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது