நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல் கிணறு முதல் குமாரபுரம் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் வாகனங்களை மறித்து திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு சுற்றி திரிந்த திருநங்கைகள் சிலரை போலீசார் அடித்து விரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைள் 25க்கும் மேற்பட்டோர் பணகுடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் மற்றும் பதாகைகளை சேதப்படுத்தினர்.
பின்பு அப்பகுதியில் உள்ள சாலையின் குறுக்கே அமர்ந்து தங்களை தாக்கி விரட்டிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அவர்கூள சமாதானப்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதில் பெரும் பரபரப்பாகியுள்ளது.