சூலூர் கலங்கல் சாலையில் அப்பாஸ் என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்ற அவர், மறுநாள் கடைக்கு வந்து பார்த்தபோது, கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து கடையை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி என்பதும் பகல் நேரங்களில் யாகசர் வேடம் அணிந்து கடைகளை நோட்டமிட்டு, இரவில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.