வீடியோ ஸ்டோரி

இனி இந்த இடத்தில் கூட்டமாக கூடக்கூடாது.. போலீஸ் போட்ட புது ரூல்!

வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை.

வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை என சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதற்கு மாறாக சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக சென்னை காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.