வீடியோ ஸ்டோரி

உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவிக்க தீர்மானம்

தமிழகத்தில் அதிக அளவில் இளைஞர்கள் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை புகுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக எம்.பி. தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்களை நிறைவேற்றினர். அதனைத்தொடர்ந்து பேசிய எம்.பி. தயாநிதிமாறன், மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தராது என்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளதால் தான் மத்திய அரசு கல்விக்கான நிதியை வழங்க மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்தியாவின் மிக பெரிய சொத்தாக மனித வளம் உள்ளதாகவும், அதில் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான் என்றும் தெரிவித்தார்.