கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் களத்தில் Get Out என்ற ஹேஷ்டேக் பெரும் புயலை கிளப்பி வருகிறது. Get Out மோடி என திமுகவும், Get Out ஸ்டாலின் என பாஜகவும் மாறி மாறி ட்ரெண்ட் செய்து வந்த நிலையில், அதே Get Out-ஐ வைத்து திமுக, பாஜகவை ஒரே போடாக போட்டுத் தாக்கியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுன கதையாக தொடங்கிய இந்த Get Out ட்ரெண்ட், இப்போது தவெகவின் தாரக மந்திரமாக மாறியுள்ளது. ஆம்! தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்கவிழா, மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.