உத்தரப்பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுபான்மையினரை குறிவைத்து புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலை, நீர்நிலைகள், ரயில் பாதைகளை ஆக்கிரமிக்கும் எந்த கட்டிடத்தின் மீதும் மத வேறுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தது. மேலும், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு - மதத்தை பொருட்படுத்தாமல் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும், மறுஉத்தரவு வரும் வரை நாடு முழுவதும் புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீடியோ ஸ்டோரி
மத வேறுபாடின்றி புல்டோசர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி
மறுஉத்தரவு வரும் வரை நாடு முழுவதும் புல்டோசர் நடவடிக்கைக்கான தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது