வீடியோ ஸ்டோரி

கரும்பு வெட்டும் வேலைக்கு போன வேம்புக்கு சிவா மீது ஆசை.. அடித்து கொன்ற சிவா.. கடலூரில் பரபரப்பு

2 வருடமாக தகாத உறவில் இருந்த கள்ளக்காதலியை அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்  அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேம்பு. இவருக்கும் தேவங்குடி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜெய்சங்கர் என்பவருக்கும் திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளன.

வேம்பு கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அவருடன் ஒன்றாக வேலை செய்த கம்மாபுரம் மேட்டுதெருவை சேர்ந்த சிவா என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஒருகட்டத்தில் நெருக்கமாகி எல்லை மீற  இருவரும் கடந்த  2வருடங்களாகத் தகாத உறவில் திளைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தகாத உறவின் நீட்சியாக கடந்த 2 தினங்களுக்கு முன்பாக, வேம்பு, தனது கணவர் குழந்தைகளை விட்டு விட்டு கம்மாபுரத்தில் உள்ள சிவாவின் குடிசைக்கு வந்து தங்கி இருந்துள்ளார்.


இந்த நிலையில், வேம்பு  உடலில் காயங்களோடு சடலமாகக் கிடப்பதாகத் அக்கம்பக்கத்தினர், கம்மாபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  இதன்பேரில் அங்கு வந்த போலீசார், ஆய்வு செய்தபோது வேம்பு தலையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.  தொடர்ந்து வேம்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் வழக்கு பதிவு செய்த கம்மாபுரம் போலீசார், சிவாவை தேடி வந்த நிலையில்,  கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கார்மாங்குடி கிராமத்தில்,  உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதை அறிந்து, அவரை சுற்றிவளைத்து, கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் வேம்புவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை அடித்துக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றதாக சிவா கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வீடு தேடி வாழவந்த கள்ளக்காதலியை கள்ளக்காதலனே அடித்துக் கொன்ற சம்பவம் கம்மாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.