புதுச்சேரி அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதியின்றி நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் நோயாளிகள் அதிக அளவில் வருவதால் போதிய படுக்கைகள் இல்லாமல் அவர்கள் தரையில் பாய் விரித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் ஒரே படுக்கையில் இரு நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தேவையான படுக்கை வசதிகளை செய்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
#BREAKING | தரையில் படுக்க வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை | Kumudam News 24x7
#BREAKING | தரையில் படுக்க வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை | Kumudam News 24x7