திமுக அரசு கலைத்துறையில் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது. திரை கலைஞர்களின் நலனில் முழு அக்கறையோடு அரசு செயல்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில்,சென்னையை அடுத்த பையனூரில் கடந்த 2010ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை நடிகர்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த உறுப்பினர்கள் பயன்பெரும் வகையில் சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த பையனூரில் 90 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ரூ.1000 என 99 ஆண்டுகளுக்கு கலைஞர் அவர்கள் குத்தகைக்கு கொடுத்திருந்தார்.
அரசு ஆணையின்படி வழங்கப்பட்ட வீட்டுமனைகளில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டாததால் மனைக்கான ஆணை ரத்தானது. திரைத்துறையினரின் கோரிக்கையை அடுத்து மனைகளை பயன்படுத்தும் வகையில் புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.