வீடியோ ஸ்டோரி

#BREAKING | "விஜய் படம் 2 நாள் தான் ஓடும்.. விஜய் கட்சி.?"- கடுமையாக விமர்சித்த அமைச்சர் | Kumudam News 24x7

விஜய் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அதனை திமுக அமைச்சர்கள்தான் அதிகம் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். விஜய் கட்சி 6 மாதம் கூட தாங்காது என்று கூறியுள்ளார் தாமோ அன்பரசன்.

சென்னையை  அடுத்த மாடம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன், “இன்று நடிகர் எல்லாம் அரசியல் பக்கம் வந்துவிட்டனர். யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது. என்றும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி திமுகதான். விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அதனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 6 மாதங்கள்தான் தாக்கு பிடிக்கும். அதற்கு மேல் தாங்காது” என தெரிவித்துள்ளார்.