அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் தற்போது ஜனாதிபதி தேர்தலில் ரிபப்ளிகன் வேட்பாளராக வலுவாக பிரச்சாரம் செய்து வரும் டொனால்டு டிரம்ப், இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் செயலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தொழிற்துறையைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோணத்தில் பேசிய டிரம்ப், “ஆப்பிள், டெஸ்லா போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியா மற்றும் சீனாவில் பணியாளர்களை நியமித்து வேலை வாய்ப்புகளை வெளிநாடுகளுக்கு தாராளமாக மாற்றி விடுகின்றன. இது அமெரிக்கர்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதாகும்” என்று குற்றம்சாட்டினார்.
இந்தியர்களை பணியமர்த்துவதை நிறுத்த வேண்டும். ஆப்பிள், டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை குறைக்க வேண்டும். இந்தியா மற்றும் சீனாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை விட, அமெரிக்கர்களுக்கே வேலை வாய்ப்புகளை வழங்குங்கள். நம் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம்.
இந்தக் கருத்துகள், டிரம்ப் தனது "America First" (அமெரிக்காவிற்கு முன்னுரிமை) கொள்கையை மீண்டும் வலியுறுத்தும் வகையிலானவை. இவை பெரிதும் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளன. குறிப்பாக இந்தியர்கள் மற்றும் ஐடி துறையில் வெளிநாடுகளில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் கடந்த காலங்களிலும் ஹெச்-1பி விசா முறையை கடுமையாக விமர்சித்து வந்தவர். தற்போது அவர் இந்தியா மீது நேரடி குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அந்நாட்டின் வளரும் தொழிற்துறையையும், வேலைவாய்ப்பு சந்தையையும் குறிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் இந்தக் கருத்துகள் எதிரொலி ஏற்படுத்தியுள்ளன. தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் இந்தியத் தொழிலாளர்களை குறிவைக்கும் பேச்சு, பல தொழில் நிறுவனங்களும், தொழில்நுட்ப நிபுணர்களும் விமர்சிக்கத்தொடங்கியுள்ளனர்