K U M U D A M   N E W S

Author : Vasuki

குமரியில் கண்ணாடி பாலம் திறப்பு

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு இடையே அமைக்கப்பட்ட கண்ணாடி பாலம்

”யார் கிட்ட வேணாலும் போய் சொல்லுங்க”- செய்தியாளர்களை மிரட்டிய காவல் அதிகாரி

அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு குற்றவாளி சதீஷை அழைத்துவந்தபோது புகைப்படம் எடுக்க செய்தியாளர்கள் முயற்சி

அடுத்தடுத்த சர்ச்சை - பாம்பை கையில் சுற்றிய டிடிஎஃப் வாசன் 

பிரபல யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் காரில் பயணித்தபோது பால் பைதான் என்ற மலைப்பாம்புடன் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகரில் அதிகரிக்கும் போதைப்பொருள்... இன்ஸ்டாகிராமில் மெத்தப்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது..!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மெத்தப்பெட்டமைன் போதைப் பொருளுடன் சுற்றி வந்த இருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிறையில் இருந்து போது போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இன்ஸ்டாகிராம் மூலம் போதை பொருள் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்..!

அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநரை சந்தித்து த.வெ.க தலைவர் விஜய் புகார் அளிக்கிறார் 

எல்லா சூழல்களிலும் அண்ணணாக, அரணாக நிச்சயம் நிற்பேன் - த.வெ.க தலைவர் விஜய் கடிதம்

எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும் இருப்பேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் வன்கொடுமை சம்பவம்... தேசிய மகளிர் ஆணையம் விசாரணை..!

மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாக்சிங் டே டெஸ்ட்.. இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா.. சோகத்தில் இந்திய ரசிகர்கள்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவிய நிலையில், பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஈஷா கிராமோத்சவம் - சத்குரு உறுதி

ஐந்து ஆண்டுகளில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள ஏழு லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம் நடைபெறும் என சத்குரு தெரிவித்துள்ளார்.

பாட புத்தகத்தில் நல்லகண்ணுவின் வரலாறு.. தமிழக அரசுக்கு விஜய் சேதுபதி வேண்டுகோள்..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு பாட புத்தகத்தில் இடம் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம்..!

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம் செய்தார். அப்போது சேவாக் உடன் செல்ஃபி எடுத்து ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

திருவள்ளுவரின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி.. அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க உள்ள நிலையில் விழா மேடையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

போலீசார் வேடம் அணிந்து வசூல் வேட்டை.. சிக்கிய சீட்டிங் சாம்பியன்

சென்னை, தாம்பரத்தில் உள்ள சங்கர் நகர் பகுதிகளில் காவலர் வேடம் அணிந்து பணம் பறித்த நபர் கைது

டங்ஸ்டன் சுரங்கம் - கும்மி கொட்டி போராட்டம்

மதுரை, மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

மனிதன் உணர்ந்து கொள்ள... குணா குகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

அரையாண்டு, புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலாப்பயணிகள்

மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர்

தூத்துகுடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

லீவு விட்டாச்சு..ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள படகு இல்லத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊர் சென்று திரும்பிய ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

எதேச்சதிகாரத்தை வெல்வோம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

“திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

உட்கட்சி விவகாரங்களை விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை - பாமக தலைவர் அன்புமணி

கட்சியின் பொதுக்குழுவின் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜமே. கட்சியின் உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் நினைவு தினம்... காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மலர்த்தூவி மரியாதை..!

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து மோதல் ..!

பாமக இளைஞர் சங்கத் தலைவர் நியமனத்தால் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆய்வு..!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் எழுந்து வரும் சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை.. போலீசார் விசாரணை..!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"என் அன்புக்குரிய கேப்டன்.." - விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் நினைவஞ்சலி

என் அன்புக்குரிய கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி - ரஜினிகாந்த்