ஆன்மிகம்

மேஷம் முதல் மீனம் வரை.. இன்றைய ராசி பலன் (09.07.2026)

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை.. இன்றைய ராசி பலன் (09.07.2026)
Rasi Palan
மேஷம்

இன்று புதிய காரியங்கள் எதிலும் அவசரப்பட்டு ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் உறவினர்கள் வழியே சில விவாதங்கள் வரக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கணவன் - மனைவி இடையே சிறு ஊடல்கள் தோன்றி மறையும். பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு தந்தை வழியில் அலைச்சல்கள் ஏற்படலாம். வியாபார நிலை சுமாராகவே இருக்கும்.

ரிஷபம்

இன்று உங்களின் வாழ்க்கைத்துணை வழியில் சில செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது; எனினும் போதிய பணப்புழக்கம் இருப்பதால் அதைச் சமாளித்து விடுவீர்கள். தொடர் வேலைப்பளு காரணமாக நேரத்திற்கு உணவு உட்கொள்ள முடியாமல் போகலாம். மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை, மனஸ்தாபம் வரக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.

மிதுனம்

இன்று உங்களுக்குப் பல வழிகளிலும் அதிர்ஷ்டம் தரும் நாடாகும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் சாதகமான வெற்றியைத் தரும். உங்களின் அனைத்து செயல்பாடுகளுக்கும் வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவுகளால் ஆதாயமும், தம்பதிக்குள் நெருக்கமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதுடன், கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும்.

கடகம்

இன்று தந்தையின் நீண்டநாள் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வந்து சேரும். நண்பர்கள் மூலம் நல்ல ஆதாயம் உண்டு. பிள்ளைகளால் சிறு குழப்பங்கள் வரலாம். உடல் ஆரோக்கியம் சீராகும் என்றாலும், குடும்பப் பொறுப்புகளைச் செய்து முடிப்பதில் சற்று அலைச்சல்கள் இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்திகரமாக அமையும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு மிகுந்த உற்சாகமான நாளாக அமையப் போகிறது. பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்; அதேநேரம் அவர்களின் எதிர்காலம் குறித்து மாலையில் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். தாய்வழி உறவுகளால் சில செலவுகள் வரக்கூடும். ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்துவது நல்லது. பிற்பகலுக்கு மேல் நீங்கள் தொடங்கும் காரியங்கள் யாவும் வெற்றியைத் தரும். வியாபாரம் சீராக இருக்கும்.

கன்னி

இன்று காலையில் மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத செலவுகளால் பணத்தட்டுப்பாடு வரலாம். உறவினர்களால் நன்மைகளும், அதே நேரத்தில் சில சங்கடங்களும் மாறி மாறி ஏற்படும். எனினும், மாலையில் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் தொலைபேசி அழைப்புகள் மனதிற்கு நிம்மதியைத் தரும். பிற்பகலுக்குப் பின் உற்சாகம் கூடும். வியாபாரத்தில் மந்தமான நிலையே காணப்படும்.

துலாம்

இன்று உங்களின் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பலமடங்கு அதிகரிக்கும். குடும்பம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இன்றைய நாள் உகந்தது. இளைய சகோதரர் வழியில் சில செலவுகள் செய்ய நேரிடலாம். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி முடியும். கணவன் - மனைவி இடையே அன்பான சூழல் நிலவும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். வியாபாரத்தில் உழைப்பு அதிகமாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு இருந்தாலும், அதற்கு இணையான திடீர் செலவுகளும் காத்துக்கொண்டிருக்கின்றன. குடும்பத்தினரின் தேவைகளை தடையின்றி பூர்த்த செய்வீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவிகளைச் மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். எதிரிகளால் இருந்து வந்த மறைமுகத் தொல்லைகள் நீங்கும். வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும். பணியாளர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவார்கள்.

தனுசு

இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். திடீர் பணவரவிற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும் என்றாலும், பிள்ளைகளால் வீண் கவலைகள் வரக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். சாதகமான நாளாக இருந்தாலும், புதிய முதலீடுகள் அல்லது புதிய முயற்சிகளை இன்று தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வழக்கமான லாபம் கிடைக்கும்.

மகரம்

இன்று கையில் தேவையான அளவு பணம் இருந்தாலும், தேவையற்ற வீண் செலவுகளும் உங்களைத் தேடி வரும். எனவே, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் சென்று வருவது நல்லது. உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்க்கைத்துணை முழு ஆதரவு தருவார். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் விற்பனை நன்றாக இருந்தாலும், பணியாளர்களால் செலவுகள் கூடும்.

கும்பம்

கணவன் - மனைவி இடையே இன்று ஒற்றுமையும் அன்யோன்யமும் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவும் சாதகமான பலன்களைத் தரும். சிலருக்கு எதிர்பாராத திடீர் தனலாபம் உண்டாக வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறி உங்கள் பேச்சைக் கேட்பார்கள். இளைய சகோதரர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் விற்பனையும், பணியாளர்களின் ஒத்துழைப்பும் சுமாராகவே இருக்கும்.

மீனம்

இன்று நீங்கள் தொட்ட காரியங்கள் யாவும் தடையின்றி வெற்றியில் முடியும் என்பதால் மனதில் மகிழ்ச்சி பெருகும். பிள்ளைகளால் பெருமிதம் கொள்ளும் சம்பவங்கள் நடக்கும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்கும் பொருட்களை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவார். தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உதவி கேட்டு வரும் சகோதரர்களுக்குப் பக்கபலமாக இருப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு இதம் தரும். வியாபார லாபம் திருப்திகரமாக இருக்கும்.