சினிமா

சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Vishwanath and Sons Movie
நடிகர் சூர்யாவின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அவரது 46-வது திரைப்படமான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியைத் படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.

'லக்கி பாஸ்கர்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான வெங்கி அட்லுரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா ஒரு தொழிலதிபராக நடித்துள்ளார். தன்னைவிட 20 வயது குறைவான பெண்ணின் காதலை ஏற்க மறுக்கும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் அறிமுக போஸ்டர்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா மற்றும் ரவீனா தண்டன் ஆகியோர் நடித்துள்ளனர்; இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

முன்னதாக இத்திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தற்போது ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் புதிய தேதியை அறிவித்துள்ளனர்.

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால், வியாபார ரீதியாகவும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்திற்குத் திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.