நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஜூலை 30 அன்று வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் பிரம்மாண்டமான காட்சிகளுடன் கூடிய இந்த டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுபமுகூர்த்த நேரமான அதிகாலை 4:15 மணிக்குத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப்பில் இந்த டிரெய்லர் வெளியானது. 4 நிமிடங்கள் 9 வினாடிகள் கொண்ட இந்த டிரெய்லரில், பிரம்மாண்டமான வி.எஃப்.எக்ஸ் (VFX) தொழில்நுட்பக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அயோத்தியின் அழகிய காட்சிகள், ஸ்ரீராமராக ரன்பீர் கபூர் மற்றும் சீதையாக சாய் பல்லவியின் அறிமுகம், அவர்களின் வனவாசம், இலக்குமணனாக ரவி துபே உடன் இருக்கும் காட்சிகள் எனப் பல முக்கிய நிகழ்வுகள் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்த டிரெய்லரில் ராவணனாக நடித்துள்ள யஷின் தோற்றம் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. தங்கக் கவசங்கள் மற்றும் கம்பீரமான உடைகளுடன் ராவணனின் வலிமையான தோற்றத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ரன்பீர் கபூரின் அமைதியான ஸ்ரீராமர் கதாபாத்திரத்திற்கும் யஷின் சக்திவாய்ந்த ராவணன் கதாபாத்திரத்திற்கும் இடையே உருவாகும் மோதலே டிரெய்லரின் முக்கியக் கருவாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சன்னி தியோல் (ஹனுமான்), லாரா தத்தா (கைகேயி), ரகுல் ப்ரீத் சிங் (சூர்ப்பணகை), காஜல் அகர்வால் (மண்டோதரி), அருண் கோவில் (தசரதர்) உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான பின்னணி இசை டிரெய்லருக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. சுமார் ரூ.4,000 கோடி செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

LIVE 24 X 7