சென்னையில் நடைபெற்ற சூர்யா நற்பணி மன்ற ஆலோசனைக் கூட்டத்தில், "நடிகர் சூர்யா மக்கள் தலைவராவதை யாராலும் தடுக்க முடியாது" என்று நிர்வாகி ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அவர் அரசியலுக்கு வருகிறாரா என்ற புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சென்னையில் நேற்று (ஜூன் 28) நடைபெற்ற சூர்யா நற்பணி மன்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முக்கிய நிர்வாகி ஒருவர், "இங்கே கூடியிருக்கும் ரசிகர்களின் முகங்களைப் பார்க்கும்போது எனக்குப் பல எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிகிறார்கள். காலமும் கடவுளும் முடிவு செய்துவிட்டால் சூர்யா அண்ணன் மக்கள் தலைவராவதை யாராலும் தடுக்க முடியாது. அண்ணனுக்காக எதையும் இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும்" என உணர்ச்சிபொங்கப் பேசினார். இந்த வீடியோ இணையத்தில் பயங்கரமாக வைரலாகி, சூர்யாவின் அரசியல் வருகை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
நடிகர் சூர்யாவை அரசியலுக்கு அழைத்து ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவது இது முதன்முறையல்ல. வரும் ஜூலை 23-ஆம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு, "தமிழகத்தை ஆள வாராய்" என்பது போன்ற வாசகங்களுடன் ரசிகர்கள் சமீபத்தில் பேனர்களை வைத்திருந்தனர். கடந்த ஆண்டிலும் கூட, சூர்யா 2026 சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கப்போகிறார் என்று பரவிய வதந்திகளுக்கு, "அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம்" அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தற்போதைய இந்த வீடியோ நிர்வாகிகளின் அரசியல் ஆசையை வெளிப்படையாகக் காட்டுவதாக அமைந்துள்ளது.

LIVE 24 X 7