K U M U D A M   N E W S

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் கடிதம்.. பள்ளி தாளாளருக்கு தொடர்பு?...

ஓட்டுநரை பழி வாங்குவதற்காக கடிதம் அனுப்பியதும், கோவளம் கடலோர காவல்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்ததை அடுத்து, தலைமறைவான தனியார் பள்ளி தாளாளரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Vinesh Phogat: “வினேஷ் போகத் தகுதி நீக்கம் பின்னணியில் சதி..” பகீர் கிளப்பிய விஜேந்தர் சிங்!

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில், சதி இருப்பதாக குத்துச் சண்டை வீரர் விஜேந்திர சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் ரூ.200 கோடி நிலப் பிரச்சினையா?.. அஸ்வத்தாமன் சிக்கியது எப்படி?...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேலூர் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனை விசாரிக்க போலீஸ் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Priya Bhavani Shankar: இந்தியன் 2 தோல்வி... ராசியில்லாத நடிகை..? பிரியா பவானி சங்கர் கூல் ரிப்ளே!

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 தோல்வியை சந்தித்தது. பிரியா பவானி சங்கர் நடித்ததால் இந்தப் படம் தோல்வியடைந்ததாகவும், அவர் ராசியில்லாத நடிகை என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். இதுகுறித்து பிரியா பவானி சங்கர் ரொம்ப கூலாக பதில் கூறியுள்ளார்.

“நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” - வினேஷ் போகத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு குரல்...

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், வினேஷ் போகத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

GOAT: விஜய்யின் கோட் பட கதை இதுதானா... வெங்கட் பிரபுவின் ஸ்கெட்ச் ஒர்க்அவுட் ஆகுமா..?

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் திரைப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி குறித்து வெளியான தகவல்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி துப்பாக்கியை காட்டிய பிரபல ரவுடியின் மகன்.. தட்டித் தூக்கிய போலீஸார்

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Vinesh Phogat: ஒரே இரவில் 1.9 கிலோ எடை குறைத்த வினேஷ் போகத்.. மருத்துவமனையில் அனுமதி!

வினேஷ் போகத் தீவிர உடற்பயிற்சியின் மூலம் ஒரே இரவில் 1.9 எடை குறைத்துள்ளார். முடிவில் ,100 கிராம் எடையை குறைக்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு முழுவதும் உடற்பயிற்சி மேற்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் தகவல்கள் கூறுகின்றன.

இடி மின்னலோடு கொட்டப்போகும் கனமழை.. 10 மாவட்ட மக்கள் உஷார்.. வானிலை ஆய்வு மையம் வார்னிங்

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிமுக குறித்து அவதூறு: சபாநாயகர் அப்பாவுக்கு நீதிமன்றம் சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு!

இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததை அடுத்து, பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையை எடுக்கும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

“திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது” - டிடிவி தினகரன் ஆவேசம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக முடக்கிவருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்.. பதக்க வாய்ப்பு பறிபோனது.. என்ன நடந்தது?

இந்திய நேரப்படி இன்று இரவு 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கம் கிடைக்கும். தோற்றாலும் வெள்ளி கிடைக்கும் என்ற பதக்க வாய்ப்பு அவருக்கு உருவாகி இருந்தது.

Manu Bhaker: மக்களின் அன்பு மழையில் நனைந்த மனு பாக்கர்.. சாதனை மங்கைக்கு உற்சாக வரவேற்பு!

மனு பாக்கர் வந்த ஏர் இந்தியா விமானம் 1 மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு வந்தது. ஆனால் இதையும் பொருட்படுத்தாமல், லேசாக தூறிய மழைக்கு மத்தியிலும் விமான நிலையத்தில் காத்திருந்த மக்கள் இரட்டை பதக்க மங்கைக்கு மிகப்பெரும் வரவேற்பு கொடுத்தனர்.

“கலைஞரின் புகழ் குறையப்போவதில்லை” - கவிஞர் வைரமுத்து பேச்சு

“பறந்து போகிற பறவைகள் கடல் மீது எச்சமிட்டால் கடலுக்கு ஏதும் கலங்கமில்லை. அதேபோல கலைஞயரை பற்றி பேசுவதால் கலைஞரின் புகழ் குறையப்போவதில்லை” என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Prabhas: ரியல் பாகுபலியாக மாறிய பிரபாஸ்… அடேங்கப்பா! வயநாடு மக்களுக்கு கோடிகளில் நிவாரணம்!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக, தெலுங்கு நடிகர் பிரபாஸ் கோடிகளில் நிதியுதவி செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அட கொடுமையே! 'ஏன் திருமணம் செய்யவில்லை' என்று நச்சரித்த உறவினர் அடித்துக் கொலை!

திருமணம் செய்யாமல் இருக்கும் 90 கிட்ஸ்களிடம், ''நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை? எப்போது திருமணம் செய்வீர்கள்?'' என்று தொடர்ந்து கேள்வி கேட்பதை ஒருசிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக 90 கிட்ஸ்களின் உறவினர்கள் தினமும் மேற்கண்ட கேள்வியை கேட்கவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கமே வராது.

இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்; நடுரோட்டில் வித்தை காட்டும் இளைஞரால் பொதுமக்கள் அவதி

கரூரில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் பொதுவெளியில் சாகசம் செய்யும் கல்லூரி மாணவரின் செயல் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

வேண்டுதலை நிறைவேற்றும் ஸ்ரீ தான்தோன்றி அம்மன்; 501 முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்

தென்காசி மாவட்டம் ஸ்ரீ தான்தோன்றி அம்மன் திருக்கோயிலில் அம்மனை வேண்டி சிறுமிகள் மற்றும் பெண்கள் சுமார் 501 முளைப்பாரிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் அரசு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

''முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம். கலைஞர் புகழ் பரவட்டும்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஊட்டி மலை ரயில் போக்குவரத்து தொடக்கம்! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

உதகையில் கன மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 6 நாட்களாக தடை பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனம்.. யார் இவர்? முழு விவரம்!

83 வயதான முகமது யூனிஸ் தொழில் அதிபராகவும், பொருளாதார நிபுணராகவும் உள்ளார். பின்தங்கிய மக்களுக்கு உதவும் வகையில் 'கிராமீன் வங்கி'யை நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள்.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!

அரசியலில் மட்டுமின்றி எழுத்தாளர், வசனகர்த்தா, இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர் என பன்முக திறமை கொண்டவர் கலைஞர் கருணாநிதி. இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு முத்தான திட்டங்களை கொண்டு வந்தவர்.

பாரீஸ் ஒலிம்பிக் 2024: சாதனை படைத்த வினேஷ் போகத்.. இந்திய ஹாக்கி அணி ஏமாற்றம்!

ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிய நிலையில், இரு அணி வீரர்களும் 3வது கோல் அடிக்க போராடினார்கள். ஆனால் 54வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மார்க்கோ 3வது கோல் அடித்து இந்திய ரசிகர்களின் மனதில் ஈட்டியை பாய்ச்சினார்.

வங்கதேசத்தில் நெருக்கடி.. திருப்பூருக்கு வாய்ப்பு.. அண்ணாமலை வலியுறுத்தல்

ஜவுளித்துறையில், தமிழகத்துக்குக் கிடைக்கவுள்ள மாபெரும் தொழில் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Pa Ranjith: “தங்கலான் படத்துக்கு பட்ஜெட் சிக்கல் இருந்தது..” ஞானவேல் ராஜாவை கூல் செய்த பா ரஞ்சித்!

பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம், வரும் 15ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பட்ஜெட் பிரச்சினை குறித்து இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா ரஞ்சித் வெளிப்படையாக பேசியுள்ளார்.