கர்நாடகாவில் நடைபெற்ற சி.இ.டி (CET) நுழைவுத்தேர்வின் போது மாணவர்களின் பூணூலை அகற்ற அதிகாரிகள் வற்புறுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு (CET) கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. நேற்று பெங்களூரு மடிவாளா பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்திற்கு வந்த ஐந்து மாணவர்கள் பூணூல் அணிந்திருந்ததைக் கண்ட அதிகாரிகள், தேர்வெழுத வேண்டுமானால் அவற்றைக் கழற்ற வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதேபோன்ற சம்பவங்கள் சிவமொக்கா மற்றும் பீதர் ஆகிய இடங்களிலும் நடந்துள்ளன. இது குறித்துத் தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தேர்வு மையங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
அரசியல் மோதல் மற்றும் கண்டனம்
கடந்த ஆண்டே இதேபோன்ற சர்ச்சை எழுந்தபோது, பூணூல் உள்ளிட்ட புனிதச் சின்னங்களை அகற்றக் கூடாது என அரசு உறுதியளித்திருந்தது. தற்போது மீண்டும் இது நிகழ்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக், "காங்கிரஸ் அரசு இந்து விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறது" எனச் சாடியுள்ளார். இந்துக்களின் நம்பிக்கைகள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை
நிலைமை விபரீதமானதைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் எம்.சி. சுதாகர் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததன்பேரில், மாணவர்களின் பூணூலை அகற்றச் சொன்ன 3 அதிகாரிகள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறிச் செயல்பட்ட அதிகாரிகள் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

LIVE 24 X 7