பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இருந்து பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு தவெக அரசை திமுக கடுமையான சாட்டியுள்ளது. அதேபோல், இவ்விவகாரத்தில் கூட்டணியில் இருக்கும் காங்கிரசையும் திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், "தந்தைப் பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், ஜவகர்லால் நேரு ஆகியோருக்கு மிகப் பெரிய அவமரியாதை செய்துவிட்டது விஜய் அரசு. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் இருந்து பெரியார், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
ஒட்டுமொத்த சமூக நீதிப் போராளிகளையும் கொதித்தெழச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி வரலாற்றுப் பக்கங்களில் இருந்து பெரியார், அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பிரதமர் நேருவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும், அதற்குப் பின்னால் இருந்த பெரியார், அம்பேத்கரின் சமரசமற்ற சமூக நீதிப் போராட்டங்களும்தான் இன்று தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் அனுபவிக்கும் 69 % இடஒதுக்கீட்டின் அடித்தளம். அந்த வரலாற்றையே கிழித்தெறிய முற்படுகிறது தவெக அரசு.
நேரு பெயரை நீக்கியிருக்கிறார்களே… காங்கிரஸ் கட்சிக்கு மானம், ரோஷம், சொரனை இல்லையா? ’விஜய் போற்றி’ பாடும் பஜனை மடமாகிவிட்ட சத்தியமூர்த்தி பவனை விஜய்பவன் என மாற்றிக் கொள்ளுங்கள். கதர் கிழிஞ்சா தைக்க முடியாது காங்கிரஸ்காரனை திருத்த முடியாது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டே பாஜகவின் நிழல் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது விஜய் அரசு.
பெரியார், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்களை மீண்டும் சேர்த்து திருத்தப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

LIVE 24 X 7