திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வெளியேறுவதாக அதன் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இந்த முக்கிய முடிவை வெளியிட்டார். கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட கட்சியின் தீவிர ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தற்போதைய அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் தொடர முடியாத நிலை உள்ளதால் இதிலிருந்து விலக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். "தற்போது திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை, இதைவிட எங்களால் அழுத்தமாகச் சொல்ல முடியாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
விலகலுக்கான பின்னணியும் தவெக ஆதரவும்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. இச்சூழலில், "தவெக ஆட்சி 3 மாதம் கூட நீடிக்காது" என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருக்கக் கூடாது என்று வீரபாண்டியன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் யாருக்கு ஆதரவு என்பது குறித்துக் கட்சி முறைப்படி முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.
பாஜக தவிர மற்றவர்கள் நட்பு சக்திகள்
திமுக கூட்டணியில் இருந்து விலகினாலும் தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளைத் தவிர்த்து, திமுக, அதிமுக மற்றும் தவெக உள்ளிட்ட அனைத்து ஜனநாயகக் கட்சிகளும் தங்களுக்கு நட்பு சக்திகள்தான் என்று வீரபாண்டியன் தெளிவுபடுத்தியுள்ளார். ஆளுங்கட்சியான தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு முக்கியக் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து முற்றிலும் வெளியேறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.

LIVE 24 X 7