அரசியல்

மேகதாது விவகாரம்: 'ஜனநாயகன்' வசூல் பாதிக்கும் என பயம்- முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த உதயநிதி!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் விஜய் அடகு வைத்துவிட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேகதாது விவகாரம்: 'ஜனநாயகன்' வசூல் பாதிக்கும் என பயம்- முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த உதயநிதி!
Udhayanidhi Stalin and CM Vijay
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் விஜய் அடகு வைத்துவிட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.

இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.

கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.

இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.