தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் விஜய் இன்று பதிலுரை அளித்தார்.
அப்போது, சட்டப்பேரவைத் தலைவரிடம் ஒரு குட்டிக்கதைக் கூறுவதற்கு முதல்வர் அனுமதி கேட்டார். பேரவைத் தலைவர் அனுமதி அளித்த நிலையில், முதல்வர் கதையைக் கூறினார்.
அதில், ”ஒரு ஊருல பெரியவர் ஒருவர் வெய்யில் அதிகமாக இருப்பதாக தெரிவித்து கண்ணில் கைவைத்து தேடிக்கொண்டிருந்தார். அருகில் இருந்த சிறுவன் ஒருவன், என்ன தேடுறீங்க என்று கேட்க, அந்த பெரியவர், “உங்க அப்பா இங்கதான் இருப்பாருனு சொன்னாங்க.... அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்க அப்பாவைக் காணோம்” என்று கூறி முடித்தார். அதாவது, கொளத்தூரில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோல்வியடைந்து சட்டப்பேரவைக்கு வரமுடியாமல் போனதை அவர் மறைமுகமாக விமர்சித்தார்.
இந்த நிலையில் முதல்வரின் விமர்சனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர். பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை. எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, நடிகர் என்பதை மறந்து, இனியாவது முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதல்வர் விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதை உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LIVE 24 X 7