தமிழக அரசியலில் கூட்டணி மறுசீரமைப்புகள் அதிவேகமாக நடந்து வரும் வேளையில், ஒன்பது ஆண்டுகால தி.மு.க உறவை முறித்துக் கொண்டு ம.தி.மு.க வெளியேற உள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க உள்ளதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முதல் கடந்த 2026 சட்டமன்றத் தேர்தல் வரை சுமார் ஒன்பது ஆண்டுகளாகத் தி.மு.க கூட்டணியில் நீடித்து வந்த ம.தி.மு.க, தற்போது அதிலிருந்து விலகும் இறுதி முடிவை நோக்கி நகர்ந்துள்ளது. கடந்த தேர்தல்களில் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட நிர்பந்திக்கப்பட்டதால் கட்சியின் தனித்துவ அடையாளம் பாதிக்கப்படுவதாக ம.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் நீண்டகாலமாக அதிருப்தி நிலவி வந்தது. இந்நிலையில், வரும் ஜூன் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ம.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணியில் இருந்து விலகும் அதிகாரப்பூர்வ முடிவை வைகோ அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
த.வெ.க-வை நோக்கி நகரும் ம.தி.மு.க
தமிழகத்தில் விஜய் தலைமையில் த.வெ.க ஆட்சி அமைந்ததற்குப் பிறகு அரசியல் களம் முற்றிலும் மாறியுள்ளது. விஜய் முதல்வராகப் பதவியேற்றவுடன் வைகோவின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தது முதலே இரு கட்சிகளுக்கும் இடையேயான இணக்கம் அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் விஜய் திருச்சி சென்றபோது ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவரை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். மேலும், நேற்று மாலை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியது ம.தி.மு.க - த.வெ.க கூட்டணி உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
வைகோ - விஜய் சந்திப்பும் கூட்டணிப் பேச்சும்
அமைச்சரின் சந்திப்பைத் தொடர்ந்து, இன்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்க உள்ளார். தி.மு.க கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேற உள்ளதாகக் கூறப்படும் தற்போதையச் சூழலில், இந்தச் சந்திப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இச்சந்திப்பின் போது த.வெ.க கூட்டணியில் ம.தி.மு.க அதிகாரப்பூர்வமாக இணைவது குறித்தும், எதிர்வரும் அரசியல் நகர்வுகள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதயசூரியன் சின்ன எம்.எல்.ஏ-க்களின் நிலை என்ன?
ம.தி.மு.க-வின் இந்த அதிரடி முடிவால், தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் (கடையநல்லூர்) மற்றும் செந்தில்நாதன் (சீர்காழி) ஆகியோரின் பதவிக்கு என்ன நேரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே த.வெ.க அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தின் போது இவர்கள் இருவரும் அவை நடவடிக்கையைப் புறக்கணித்துச் சர்ச்சையைக் கிளப்பியிருந்தனர். தற்போது ம.தி.மு.க அதிகாரப்பூர்வமாகக் கூட்டணியை விட்டு வெளியேறும்போது, இந்த இரு எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் தமிழக அரசியல் களத்தில் அதிகரித்துள்ளது.

LIVE 24 X 7