சென்னையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைக் கண்டுவரும் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்றைய தினம் சரிவைச் சந்தித்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த 29-ஆம் தேதி கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,155-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,240-க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து, 30-ஆம் தேதி விலை உயர்ந்து கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.13,230-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய தினமும் தங்கத்தின் விலை உயர்வைக் கண்டது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேவேளையில், வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7