சர்வதேச சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்றும் மாற்றமின்றி நீடிக்கிறது. அதேநேரம் வெள்ளியின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.
சென்னையில் கடந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு, பின்னர் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000-க்கு விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், வாரத் தொடக்கமான இன்றும் (மே 18) அதே விலையிலேயே தங்கம் நீடிக்கிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,750-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரக் கடும் விலை உயர்வுக்குப் பிறகு, தங்கம் விலை தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் நிலைபெற்றுள்ளது நகைப்பிரியர்களுக்குச் சற்று நிம்மதியைத் தந்துள்ளது.
வெள்ளி விலை மீண்டும் உயர்வு
தங்கத்தின் விலை மாறாமல் இருந்தாலும், வெள்ளியின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கிலோவுக்கு ரூ.15,000 குறைந்திருந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10,000-மும் உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7