பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் (NITI Aayog) கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் தொடர்பான பல்வேறு முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசிடம் அவர் வலியுறுத்தினார்.தமிழ்நாட்டின் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, மீனவர் நலன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்வை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதாக தெரிவித்த அவர், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உலகப் புகழ்பெற்ற திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் பண்பாட்டு பெருமையை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் விண்வெளி உற்பத்தி மையத்தை தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவிக்க வேண்டும் என கோரிய விஜய், காலநிலை மாற்ற சவால்களை சமாளிக்கும் வகையில் ‘காலநிலை தாங்குதன்மை பெருந்திட்டம்’ தொடங்கப்பட வேண்டும் என்றார்.
தமிழகத்தின் போக்குவரத்து வளர்ச்சிக்காக சென்னை-குமரி அதிவேக ரெயில் வழித்தடத்தை அமைக்க வேண்டும் என்றும், செங்கல்பட்டு-திருச்சி ஜி.எஸ்.டி. சாலை, திருச்சி-கரூர் மற்றும் கரூர்-கோவை சாலைகளை 6 வழிச்சாலைகளாக மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஒகேனக்கல் 3-ம் கட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ரூ.2,283.40 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும், இலங்கை மற்றும் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டிற்கான 2-வது எய்ம்ஸ் மருத்துவமனையை கோவையில் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய முதல்வர் விஜய், மாநிலத்திற்கு நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி கல்வி நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார். அத்துடன், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கல்வி நிதியை வழங்க மத்திய அரசு நிர்பந்திக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்த அவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து “வறுமையற்ற தமிழ்நாடு” என்ற புதிய இயக்கத்தை உருவாக்க தமிழக அரசு முன்மொழிவதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதில் த.வெ.க. அரசு தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LIVE 24 X 7