தமிழகத்தில் உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் முறைகேடாகக் கோரப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் வெளியிடப்பட்ட 50-க்கும் மேற்பட்ட டெண்டர்களைத் தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்புப் பணிகள், புதிய போர்வெல் அமைத்தல் மற்றும் வாரச்சந்தை கடைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக டெண்டர்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இதில் தற்போது ஏற்பட்டுள்ள அதிரடி நடவடிக்கையின் மூலம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்களும், கோத்தகிரியில் 3 டெண்டர்களும், செங்கத்தில் 2 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தவிர மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளிலும் கோரப்பட்ட 20-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த டெண்டர்களைக் கோரி, ஒப்பந்ததாரர்கள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு வெறும் ஒன்று முதல் நான்கு நாட்கள் வரை மட்டுமே மிகக் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இத்தகைய விதிமீறல் புகாரைத் தொடர்ந்து, அந்த குறுகிய கால டெண்டர்கள் அனைத்தையும் ரத்து செய்யத் தமிழக அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அரசின் இந்த திடீர் நடவடிக்கை நகராட்சி நிர்வாக வட்டாரங்களிலும், ஒப்பந்ததாரர்கள் மத்தியிலும் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7