கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, வெள்ளிக்கிழமையான இன்று சென்னையில் அதிரடியாக உயர்ந்து மீண்டும் சவரன் 1.10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அரசியல் பதற்றங்களால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உலகளாவிய பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க உலக நாடுகள் வட்டி விகிதங்களை அதிகமாக வைத்துள்ளதால், தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அதன் விலை சரிந்து கொண்டே வந்தது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.5,600 வரை குறைந்து, நேற்று ஒரு சவரன் ரூ.1,08,000-க்கு விற்பனையானது. ஒட்டுமொத்தமாக இம்மாதம் 1-ஆம் தேதி முதல் நேற்று வரை சவரனுக்கு ரூ.8,000 வரை குறைந்திருந்த நிலையில், இன்று விலை மீண்டும் ஏறுமுகமாக மாறியுள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.2,400 வரை அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,10,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திடீர் விலை உயர்வு நகைப்பிரியர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக மாற்றமில்லாமல் இருந்த வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

LIVE 24 X 7